Thursday, December 24, 2020

 


 

அஞ்சி அஞ்சி சாவார்

 

ருத்ரா இ.பரமசிவன் 

 

அவனின்றி ஓரணுவும் அசையாது

என்று சொல்லிவிட்டு

கொரோனாவுக்கு மட்டும்

இப்போது மனிதன் மீது

பழி போடுவது என்ன நியாயம்?

வைரஸ் என்றால்

உயிரற்ற பிண்டம் என்றும்

அதற்குள்ளும் 

இருப்பது குவாண்டம் எனும்

ப்ரோபபலிடி என்றும்

அதில்

உயிர் இருக்கும் ஆனால் இருக்காது

என்றும்

ஆராய்ச்சிக்கட்டுரைகளை

அடுக்கிக்கொண்டிருக்கிறான்

விஞ்ஞான மனிதன்.

லட்சக்கணக்கில் சாவு

எனும் மரண மழை தான்

மனிதனை 

அஞ்சி அஞ்சி சாகச்செய்து

கடவுள் பக்கம் தள்ளிவிடுகிறது.

பாவம் 

என் செய்வது?

மரணத்தீட்டு எனும்

மடி வந்து தாக்காமல் இருக்க‌

கடவுளுக்கும் கூட இங்கே

ஊரடங்கு தான்.

கனத்த இருட்டுகளின் பூட்டுகளுக்கிடையே

இந்த யாகமும் பூஜையும்

என்ன சாவி வைத்திருக்கிறது

நம் இருட்டை திறந்துபார்க்க?

விஞ்ஞானம் தன் விரலில்

இரு சாவிகளை சுழற்றிக்கொண்டிருக்கிறது.

ஆம்.

அவை தான் அந்த‌

"கருப்பு  தின்மமமும்   சக்தியும்  "Dark natter $ Enegy  

 

*****

இதற்கு  ஒரு விளக்கம்

 

 

                  கொரோனா – இயற்கை – மதம்

 

எங்கு தோற்றம் இருக்கிறதோ அங்கு வாழ்வு, மறைவு, மாறி மாறி  வரும் . இதை இந்து  மதம் பிரம்மன் . விஷ்ணு சிவன்  என்ற  தத்துவம்  மூலம்  சொல்கிறது . உலகில் மக்கள்  தொகை கட்டுக்கடங்காமல்  இருக்க  இயற்கை எனும் இறைவனின்  செயல் பாடுகலில் சுனாமி வைரஸ் , பூகம்பம், புயல், யுத்தம்  அடங்கும் . அதனால்  உலகத்தின் பாரம்கூடவில்லை  . கூடினால் பூமியின்  ஈர்ப்பு சக்தி, சுழற்றச்சி  வேகம் மாறும். இந்த பிரபஞ்சத்தில் பூமி ஒரு சிறு புள்ளி . அதில் மந்தன் மிக மிக மிக சிறிய  தூசி . பூமியின் மாறும் காலநிலை காரணமாக, காற்று மற்றும் வளிமண்டல அழுத்தம் அமைப்புகள் நிலையான மாற்றத்தை அனுபவிக்கின்றன. இந்த ஏற்ற இறக்கங்கள் காற்று மற்றும் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்திய நாசா வின்ஆராய்ச்சியின் படி, நமது கிரகம் அதன் அச்சில் எவ்வாறு சுழல்கிறது என்பதைப் பாதிக்கலாம். இதனை   2004  சுனாமியின் பின் கண்டனர் இந்தோனேசிய பூகம்பத்தின் தரவைப் பயன்படுத்தும் நாசா விஞ்ஞானிகள் இது பூமியின் சுழற்சியைப் பாதித்ததாகக் கணக்கிட்டு, நாளின் நீளத்தைக் குறைத்து, கிரகத்தின் வடிவத்தை சற்று மாற்றி, வட துருவத்தை சென்டிமீட்டர் மூலம் மாற்றினர். மிகப்பெரிய சுனாமியை உருவாக்கிய பூகம்பமும் பூமியின் சுழற்சியை மாற்றியது

பி கு

இலங்கையின்   மதிப்புக்கு   உரிய மகா நாயக்க தேரோக்கள்  மந்திரித்து  கொடுத்த புனித நீர் வானத்தில் இருந்து ஹெலிகோப்டேரில்  தெளித்து விட  கோதாவின்   கட்டளை நிறை  வேற்றப்பட்டது இனி பயமில்லை.. ஊரடங்கு சட்டம் தேவை இல்லை.

 எமாற்றி பதவிக்கு வந்தவருக்கு மடையர்களை  ஏமாற்ற யக்தி தெரியாதா ?.

 கொரோனாவைபோக்க சுவிஸ் நாட்டில் இருந்து  போதகர் வந்தார். விளைவு  பலருக்கு தெரிந்ததே . கொரோனா  புது  வணிகத்தை  உருவாக்கி வருகிறது அதோடு அரசியல் வாதிகளுக்கு பத்து விகிதம் கொமிசன் கிடைக்கும்

 சென்ற வருடம் பயங்கரவாதிகள்  தாக்குதல்   . இந்த வருடம் வைரஸ் தகுதல் . அடத ட வருடம்  வேலை  இல்லா  விகிதம் அதிகரிப்பு .வறுமையின்   தாக்குதலா. மனிதனை மனிதன் மதிக்கவிட்டால்  இது  ஒரு தொடர்கதை .” வாழு  வாழவிடு “ 

No comments:

Post a Comment

    கொரோனா என்ற நுண்ணுயிரி   பொன் குலேந்திரன்   ( கனபா )         பக்கம் எல்லாம்       ஊடகச் செய்தி    பார்வைக்கு எங்கும் கொர...