சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில்,
ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.
மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் வலிகாமம் தென் மேற்க்கு பிரதேச சபைக்குள் அமைந்துள்ளது. யாழ் நகரில்
இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி
இவ்வூருக்குச் செல்கிறது மானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதன் திரிபே மானி
ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம்
என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் =
கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன் என்ற
அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் உள்ளது
யாழ் குடா நாட்டில் பிரித்தானியர்
ஆட்சி காலத்தில் மணியகாரன் என்ற சொல்
பிரபல்யமானது . “என்ன நாட்டாண்மை காட்டுசிறாய்
என்பதற்கு என்ன மணியகாரர் வேலை செய்கிறாய் என்ற சொற் பதம் ஒரு காலத்தில்
இருந்து வந்தது. அதுக்கும மானிப்பாயுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் காரணம் “பாய்”என்பதுக்கு வடியும் இடம் என்ற
பொருளும் உண்டு ஆகவே மானியக்காரன் வசித்த
இடம் காலப் போக்கில் மானிப்பாய் எனப்பெயர் பெற்றிருக்கலாம்.
யாழ்ப்பாணத்தில்
பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் அமெரிக்க சமயப் போதகர்களின் (அமெரிக்க
மிசன்) மையங்களில் ஒன்றாக இந்த ஊர்
விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான
சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பார் 1864 ஆம் ஆண்டில் இங்கே ஒரு மருத்துவமனையை
நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ்
மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு
மருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது. மானிப்பாயுக்கு அருகில் உள்ள உடுவில் மகளிர் கல்லூரியும் வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணக் கல்லூரியும் , ஆவ்வூர் கல்வி தரத்தினை உயர்த்த முக்கிய
காரணிகளாக இருந்தன அதோடு மருத
மரத்தின் கீழ் தோன்றிய மருதடி பிள்ளயாரின்
ஆசி ஊர்வாசிகளுக்கு இருந்தது
தமிழ் புது வருட தினமன்று திருவிழா
ஆரம்பிக்கும் .
போர்த்துக்கேயரின்
காலத்தில் கிராமக் கோயில்களை இடித்து அங்கிருந்த விலையுயர்ந்த விக்கிரகங்களையும்
ஆபரணங்களையும் கொள்ளையடித்தார்கள். இவ்வகையில் இடிக்கப்பட்ட கோவில்களில்
மானிப்பாய் பிள்ளையார் கோவிலும் ஒன்று போர்த்துக்கேயர் பறங்கியர் இக்கோயிலை
இடித்து இவ்விடத்தைச் சவக்காலையாக்கி விட்டனர். முன்னைய மருதம ரத்துப்பிள்ளையார்
தோற்றம்]]சவக்காலையும் மயானமும் இப்போது கோயிலிருந்து ஏறக்குறைய நூற்றிருபத்தைந்து
யாருக்கப்பால் ஆலயத்தின் மேற்கு வாசலின் நேர்திசையிலுள்ளது.
மானிப்பாய்
மணியகாரர் வளவு ஜெயேந்திரன் முதலியார் வழி
வந்தவர் அறுவை சிகிச்சை வைத்தியர்
மகேந்திரன் . டாக்டர் மகேந்திரன் யாழ்பாணத்திலும் . கொழும்பிலும்
பிரசித்தமானவர். லணடன் சென்று படித்தவர். அவர் தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம்
கல்லூரியில் ஆரம்பித்து கொழும்பு
மருத்துவக் கலூரிக்கு சென்று படித்து டாக்டரராகி அதன் பின் லண்டான் சென்றவர். டாக்டர் மகேந்திரனின் தந்தை முதலியார்
ஜெயேந்திரன் செல்வந்தர் பல சொத்துகளுக்கு உரிமையாளர். மருதடி பிளையர் கோவில்
உபயகாறர் ர . முதலியார் ஜெயேந்திரனின் நினைவாக மகேந்திரன் தனது ஒரே மகளுக்கு
ஜெயந்தி என்று பெயர் வைத்தார்
டாக்டர்
ஜெயந்திக்கு செல்வம் இருந்தும் எளிமையை விரும்புவள் ஜெயந்தி. படித்தது உடுவில் மகளிர் கல்லூரியில் . அந்த கல்லூரியில் இருந்து கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு பத்தொன்பது
வயதில் தேர்வு செய்யப்பட்ட முதல் மாணவி அவள் . ஐந்து வருடங்கள் படித்து, டாக்டராகி, மருத்துவ துறையில் பல காலம் சேவை
செய்தவள். முக்கியமாக தோற்று நோய் துறையில் நிபுணத்துவம் பெற்றவள். கைராசிக்காரி. காலம் சென்ற பிரபல அறுவை
சிகிச்சை நிபுணர் டாக்டர்
சுப்பிரமணியத்தின் ஒரேமகள் . தந்தையின் விருப்பப்படி அவர் கண் மூட முன் டாக்டர்
பட்டம் பெற்றவள். மானிப்பாய் சண்டிலிப்பாய் வீதியில் உள்ள
தன் பூர்வீக மணியகாரர் வளவில் இருந் ஐந்து அறைகள் உள்ள கல் வீட்டில்
தாய் ஈஸ்வரியுடனும் பாட்டியுடனும்
வாழ்ந்து வந்தாள். அவர்களுக்கு உதவியாக போரில் பெற்றொரை இழந்த தூரத்து உறவை
சேர்ந்த சிறுவன் நந்தன் இருந்தான் அவன் மானிப்பாய் இந்து கல்லூரியில் பத்தாம்
வகுப்பில் படித்து கொண்டுஇருந்தான் ஜெயந்தி அக்காவை போல் படித்து தான்
டாக்டராக வேண்டும் என்பதே அவன் நோக்கம்.
டாக்டர்
ஜெயந்தியின் திறமையில் மேல்மட்டத்து அதிகாரிகள் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள் கொழும்பில்
அங்கோட தோற்று நோய் வைத்திசாலையில்
வேலை செய்த அவள் கொரோனா வைரசால்
இன மத வேறு பாடு காட்டாமல் பாதிக்கப்பட்ட வர்களை சரிவர கவனித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து வராமல் காப்பாற்றிய பெருமை அவளுக்கு உண்டு.
இரவுபகல் பாராமல் கடுமையாக சேவை செய்தாள்.
டாக்டர்
ஜெயந்தி தன்னுடன் படித்த டாக்டர் சுகுமாரை
காதலித்து திருமணம் செய்ய பெற்றோரிடம் ஒப்புதல் பெற்றாள். டாக்டர் சுகுமார்
வவுனியா ஆஸ்பத்திரியில் வேலை செய்தார். அவரின் பூர்வீகம் சண்டிக்குளி
.சுகுமார் படித்தது பரி யோவான்
கல்லூரியில் .
தனது பாட்டிக்கு சுகமில்லாததால் யாழ்ப்பாணத்து
ஆஸ்பத்திரிக்கு மாறுதல்
கிடைத்து டாக்டர் ஜெயந்தி அங்கு வேலை
செய்ய ஆரம்பித்தாள். தினமும் தனது தன் சொந்த
காரில் மானிப்பாயில் இருந்து ஆறு மைல்
தொலைவில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு
போய் வருவாள். கொரோனா வைரஸ் மூன்று இராணுவ அதிகரிகளை பாதித்ததால் அவர்களை
குணப்டுத்தி இராணுவ அதிகாரிகளிடம் நல்ல
மதிப்பினை பெற்றாள் ..
யாழ்ப்பாண
பகுதியில் உள்ள கிராமத்துக்கு வெளி
நாட்டில் இருந்து கொரோனா நோயினால் பாதிக்கப்
பட்ட ஒருவரால் நடத்திய ஓன்று கூடலினால் , கொரோனா
வைரஸ் மக்களிடையே பரவத் தொடங்கியது .
அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு
பிறப்பிக்கப் பட்டது . அத்திய
அவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மட்டுமே பொய் வர பாஸ் கொடுகப்பட்டது. அதில் டாக்டர்
ஜெயந்தியும் ஒருத்தி
*****
அன்று
டாக்டர் ஜெயந்திக்கு இரவு எட்டுமணி முதல் காலை அறு மணி வரை வேலை
இரவு
சாப்பாட்டை முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட மாலை ஆறு முப்பது
ஆகிவிட்டது அப்போது நந்தன் அவளிடம் வந்தான்.
“என்னடா
நந்தா படிப்பு எப்படிபோகுது?. உன் படிப்பை
கவனிக்க இந்த கொரோன வைரஸ் வந்த
பின் வேலை கூடியதால் எனக்கு நேரமில்லை. அதோடை இப்ப உனக்கு ஸ்கூலும் இல்லை ” ஜெயந்தி சொன்னாள்.
“அக்கா
எனக்கு சயன்ஸ் பாடத்திலை சில கேள்விகள்
உங்களிடம் கேட்க இருக்கு உங்களுக்கு நேரமிருந்தால் நாளைக்கு
வேலை முடிந்து வந்த பின் சொல்லித்தாருங்கோ”.
“நீ மற்ற
பாடங்களை படித்து முடித்து போடு. டிவி பார்த்துக் கொண்டு இருக்காதே
“ அக்கா
இந்த முக கவசத்தோடு, கையில் உறை அணிந்து டிரைவ்
பண்ணுவது கஷ்டம் இல்லையா
உங்களுக்கு”?
“இது
முக்கியம் தேவை வைரஸ் என்னை
தாக்காமல் இருக்க வேண்டும் . பல நோயாளிகளை
நான் கவனிக்க வேண்டும் நான் செய்து காட்டினால் தான் மற்றவர்களும்
அதன் படி நடப்பார்கள். நீ கடைக்கு போகும்
போதுமுக கவசம் அணிய மறர்காதே.
ஆக்களுடன் நெருங்கி நின்று பேசாதே .குறைந்தது ஆறடி தூரத்தில்
நின்று பேசு. வீட்டுக்கு சாமான் தேவை எண்டால்
அவன் கடைக் காரன் இந்திரனுக்கு
பொன் செய் . அவன் கொண்டு சாமான்களை பில்லோடு
வீட்டு வாசலில் வைத்து விட்டு
போவான் . பிறகு காசு நான் குடுப்பன் “
“அக்கா
உங்கிளிடம் ஒண்டு கேட்கட்டுமா”
“ என்ன
கேள் “
“என் இந்த
ஊரடங்கு சட்டம். இது தேவையா. சடப் படி இது செல்லாதாம் ”
‘முந்தி
இரு தடவை இந்த ஊரில்ஊரடங்கு சட்டம்
இனக்
கலவரத்தின்
போதும் சாதி கலவரத்தின் பொது செயல்
படுத்தப் பட்டது அது சட்டத்தின் படி செயல் படுத்தப் பட்டது .
அப்போ நடந்தது வேறு ஆட்சி . இப்ப
நடப்பது வேறு ஆட்சி .
இந்த முறை கொரோனா
வைரஸ் பரவாமல் இருக்க
நாடு முழவதும் ஊரடங்கு சட்டம்
வந்திருக்கு. நல்லது தானே”.
“இந்த
இரவில் தனியாய் காரில் அந்த கொம்பேமணல்
சுடல யை தாண்டி போவதுக்கு உங்களுக்கு பயமாக இல்லையா
அக்கா ? இப்போ இந்த ஊரடங்கு சட்டத்தினால் ரோட்டில் ஈ
குருவி கூட இருக்க மாட்டுது. டயர் பஞ்சர் ஆனாலும் உங்களுக்கு
உதவிக்கு ஒருவரும் இல்லை”
“எனக்கு
என்னடா நந்தா பயம். நான் என்ன காசா கொண்டு போறன். ஆக இந்த
கழுத்தில் உள்ள அப்பா போட்ட கணபதி படம்
உள்ள பதக்கம் சங்கிலி . காதுலை . தோடு. அதோடு கையில் ரிஸ்ட் வாட்ச் . எனக்கு எந்த
ஆபத்திலும் மருதடிப் பிள்ளையார் துணை
இருப்பார் அவர் எங்கள் குல தெய்வம் “
“அது சரி
அக்கா ஊரிலை நிலமை மோசம்
ஆனைக்கோட்டையில் நல்லெண்ணெய் விற்கும் கடையடியில் எதோ
புது கும்பல் ஓன்று இரவில் வழி
மறித்து ஆக்களுக்கு கரைசல் கொடுக்குதாம்”
“ யார்
உதை உனக்கு சொன்னது “?
“எண்டை
பிரண்ட்ஸ் சொன்னவங்கள் . எதோ ஒரு
ஆஹா என்ற கும்பல் கள்ளச்சாராயம் காச்சி இந்த இந்த ஊரடங்கு காலத்தில் குடி வகை
வாங்க முடியாதவர்களுக்கு
விக்கினமாம். வீடுகளில்
புகுந்து கொள்ளை அடிக்கினமாம் “,
“யார்
உதையும் உனக்கு சொன்னது
“
என்டை பிரிண்ட் ராஜன் சொன்னவன் .
அவனுக்கு இந்த ஊரிலை நடக்கிறது
எல்லாம் தெரியும். எதுக்கும் போகும் போது கவனமாக போங்கோ அக்கா , ஒருத்தருக்கும் லிப்ட் குடுக்க வேண்டாம் “
“ உன்
அறிவுரைக்கு நன்றி. காரில் போவதால் பயமில்லை . அடிக்கடி போலீசும் ஆர்மி ரோட்டிலை போய்
வருகுது என்னிடம் ஊர்டங்கு பாஸ்
இருக்கு “
“அக்கா
இரவுக்கு குடிக்க பால் பிலாஸ்கிலை கொண்டு
போறியல் தானே
“ஓம்
அதெல்லாம் கொண்டு போறன் நீ அம்மாவையும்
ஆச்சியையும் கவனமாய் கவனத்துக் கொள் நாளைக்கு விடிய எழு மணிக்கு வந்திடுவன் யார் வீட்டு கதவை தட்டினாலும் திறக்க வேண்டாம் என்ன’”
“ ஓம்
அக்கா “
*****
ஜெயந்தியின்
டொயோட்டா கரீனா கார்
மானிப்பாயில் இருந்து ஓட்டுமடம் பாதையில்
தட்டார் தெரு சந்தி
நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அந்த
வீதியில் யாழ்ப்பாணம் மாநகர
சபை எல்லை வரும் மட்டும் லைட் இல்லை
வீதியில் ஒரு சனமும் இல்லை. சில் வண்டின் சத்தம் மட்டும் கேட்டது இரு சொறி
நாய்கள் தெரு வோரத்தில்
உறவாடிக்கொண்டு நின்றன . ஓரிரு வீடுகளில்
விளக்கு எரிந்தன அதில் ஓன்று
காந்திமதி டீச்சர்வீடு, அவ இரவு
முழுவதும் சீரியல் பார்க்கிறவ . பல
கடைகள் முடிக் கிடந்தன. இந்த கொருனா வந்த பின் பலர் வியாபாரம் படுத்து விட்டது. அதோடை சேர்ந்து
ஊரடங்கு சட்டம் வேறு .
முருகையாவின் பலசரக்கு கடடையின்
ஒரு கதவு திறத்து இருந்தது அதுக்கு முன் இருவர் நின்றனர். அதற்கு
பக்கத்தில் இருந்த வைரவர் கோவிலும்
முடிக் கிடந்தது அதையும் தாண்டி ஜெயந்தியின் கார் கொம்பேமணல் சுடலை யில் இருந்து அரை மைல்
தூரத்தில் வீடுகள் இல்லை கார் போக முடியாத வாறு
இரு பெரும் பனைமரக் குத்திகள் பாதைக்கு
குறுக்கே கிடந்தன .
“ யார் வேலை இது,
அதுவும் ஊரடங்கு சட்டம் இருக்கும்
போது இப்படியும் நடக்குது “ ஜெயந்தி
யோசித்த படியே காரில் இருந்து இறங்காமல் கையில் போனை எடுத்தாள்
போலீசுக்கு போன் செய்ய . அவளுக்கு
மானிப்பாய் போலிஸ் சப் இன்சஸ்பெக்டர்
சில்வாவை தெரியும். மறு நிமிடம்முகமூடி
அணிந்த மூன்று வாலிபர்கள் கார் கதவை
தட்டினார்கள் . சைகை மூலம் காரில் இருந்து இறங்கும் படி ஜெயந்திக்கு சொன்னார்கள். ஜெயந்தி பதில்
சொல்லாமல் பொலீசுக்கு போன் செய்தாள் . அவள்
போன் செய்து முடிக்க முன் தூரத்தில் ஆர்மி ஜீப் ஓன்று வருவதை கண்டாள். அந்த ஜீப் வருவதைக்
கண்ட அந்த மூன்று வாலிபர்களும் அங்கு நிற்காமல்
ஒடி மறைந்தனர். ஜீப்பில் வந்த மூவரில் ஜெயந்திக்கு தெரிந்த கப்டன் சொய்சாவும் ஒருவர் அவருக்கு ஜெயந்தி
வைத்தியம் பார்த்தவள். முக மூடியுடன்
இருந்த சொய்சா ஜெயந்தியை அடையாளம் கண்டு
விட்டார். அவர் அவளதுகாரின் கதவை திறந்து ஜெயந்தியிடம் நடந்ததை கேட்டார் ஜெயந்தி நடந்ததை கேப்டன் சொய்சாவுக்கு சொன்னாள்
“டாக்டர் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். நீங்கள் ஆஸ்பத்திரி போய்சேரும் வரை உங்க
பின்னல் எங்கள் ஜீப் வரும். உங்கள் போன்ற
டாக்டர்களின் சேவை இந்த சமயம் மக்களுக்கு
அவசியம் தேவை “ என்றார் முக மூடி அணிந்த சொய்சா.”
இராணுவத்தின்
ஜீப் பின் தொடரப் பாதுகாப்புடன் ஜெயந்தி தன் பயணத்தை ஆஸ்பத்திரி நோக்கி நிசப்தமான றோட்டில் மணிக்கு அறுபது கி மீ
வேகத்தில் முக கவசம்
அணிந்த படியே தன்பயணத்தை
தொடர்ந்தாள்.
****

No comments:
Post a Comment