கொரோனா என்ற நுண்ணுயிரி
பொன்
குலேந்திரன் ( கனபா )
பக்கம்
எல்லாம் ஊடகச்
செய்தி
பார்வைக்கு
எங்கும் கொரோனா
பணம் தேடி அமெரிக்கா
சென்றவர்கள்
படுகிறார்க்கள் அங்கு அவதி .
கை கூப்பி
வணங்கும் முறை
கை கொடுக்கிறது மேற்கத்தியனுக்கு
உண்ண முன் கை கழுவு சொன்னது
உலகுக்கு தமிழன்
கலாச்சாரம் .
தனக்கு எதிரி மஞ்சள் நீர் ,சாம்பிராணி
தூரத்தில் நின்றது பயத்தில் கொரோனா
தழுவி காதலியை முத்தமிட
தடைவிதித்தது கொரோனா வைரஸ்
கொரோனா தோற்றத்தை அறியும் புலனாய்வில்
கேள்விக்
குறிகள பல.
சென்நிற
தேசம் போட்ட திட்டத்தால்
செழிப்பாய்
வளர்கிறது புது அரசியல்.
உலக பொருளாதாரம். உருக்குலைந்து
உண்ண
வழியின்றி வறுமையை வளர்கிறது !
கொரோனாவா
தேர்தலா எது முக்கியம்
கேட்கிறார்கள்
அரசினை வாக்காளர்கள்.
இனம் ,மதம், மொழி
என பாராமல்
இலங்கைக்கு பகுந்தது சுற்றுலாவடிவில்.
அணுகுண்டு அழித்தது
உயர்களை
அழிவு அதிகம் கொரோனா வருகையால்
சுதந்திரமாய் வீதியில் நடந்த
எம்மை
சும்மா
வீட்டில் முடங்க செய்தது கொரோனா
முடங்கி வீட்டில் இருந்து குடித்து குடும்பத்தை
துன்புறுத்த துணை போகிறது கொரோனா.
மருத்துவத் துறை
சேவைக்கு ஒரு சவால்
மனிதன் வெல்வது நிட்சயம் !
*****
